கமல் சார் நீங்களே வாங்க... சமூக வலைதளத்தில் கதறும் நெட்டிசன்கள்!
தமிழகத்தில் முன்னணி தொலைக்காட்சியின் ஒன்றான விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. நான்கு சீசன்களை கடந்து தற்போது உள்ளது. சீசன் 5 தொடங்கி கடந்த மாதம் தான் கோலாகலமாக தொடங்கப்பட்டது.
மேலும், இந்த ஐந்து சீசன்களையும் நடிகர் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கியிருக்கிறார். இந்நிலையில் கமலஹாசனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி ஆகி உள்ள நிலையில் அவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதேவேளை, கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதால் வரும் வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிப்பதிவில் அவர் கலந்து கொள்வாரா? என்ற கேள்வி எழுந்து வருகிறது. கொள்வாரா? குறித்து தொலைக்காட்சி தரப்பில் விவாதமும் போய்க்கொண்டிருக்கிறது. அவர்கள் கமல்ஹாசனிடம் கலந்து ஆலோசித்து தான் எந்த ஒரு முடிவையும் எடுப்பதாக கூறி இருந்தனர்.
இந்நிலையில், இந்த வாரம் எலிமினேஷன் மட்டும் இல்லாமல் வழக்கம் போல் அந்த 2 நாட்களும் நடக்கிறதை ஒளிபரப்பலாம் என்று கூறப்பட்டது. அதே நடக்கிறதை கமல்ஹாசன் வீட்டிலிருந்தே நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஒளிபரப்பலாம் என்று இரண்டு கோணத்தில் விஜய் டிவி பிக் பாஸ் குழு தீவிர ஆலோசனை செய்து கொண்டிருந்தது. ஆனால், கமல் கண்டிப்பாக கொரோனா தொற்று காரணமாக அவர் வைத்தியசாலையில் இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
Oh.. First i thought #Kamal sir hosted BB for Long tym so we got used to it & feels like boring sometyms. Then now we excited for #RamyaKrishnan , but now i got to know how matured he was.. without disturbing HMs mind. Always sir the best💥, #Ramya is so Biased🤦♂️#BiggBoss5Tamil pic.twitter.com/T7XP2IPfoR
— Vishwa Govindan (@GovindanVishwa) November 27, 2021
அதே போல கமல்ஹாசனின் உடல்நிலையைப் பரிசோதித்த வைத்தியர்கள் கொரோனா சூழலில் தொடர்ந்து பேசுவது தொண்டைக்கு நல்லதல்ல என்று அறிவுரை கூறி இருக்கின்றனர். அதே போல விர்ச்சுவலில் நிகழ்ச்சியை கூறி சில டெக்கனிகள் பிரச்சனைகள் எழலாம் என்பதால் இந்த முடிவை விடுத்து, தற்போது கமல்ஹாசனுக்கு பதிலாக வேறு யாரையாவது வைத்து தொகுத்து வழங்கலாம் என்று தொலைக்காட்சி தரப்பு திட்டமிட்டு இருந்த நிலையில் தற்போது கமலுக்கு பதில் ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கி இருந்தார்.
Every time when #kamal sir says kurumpadam.. I will get goosebumps and excitement... Iniku kurumpadam potum no use.. Dint blame Rk its just kamal sir already set a standard that no one can replace 🙂#BiggBossTamil5
— Ramya Ramamoorthy (@RamyaRamamoorti) November 27, 2021
விஜய் தொலைக்காட்சியில் ரம்யா கிருஷ்ணன் ஏற்கனவே ஜோடி நம்பர் ஒன், பிக் பாஸ் ஜோடிகள் போன்ற நிகழ்ச்சியில் நடுவராக இருந்தவர். இதனால் இவரது பாஸ் தொகுப்பாளர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், நேற்றய நிகழ்ச்சியில் இவரது தொகுப்பாளர் விதம் ஒருதலைபட்சமாகவே இருந்ததாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
Kudos to Ciby for standing upto Akshara's PR Ramya 👏. Kamal sir, pls get well soon and take over as host soon #biggbosstamil5
— Divs (@palakkadponnu) November 27, 2021
இதேவேளை கமல்ஹாசன் இல்லாத குறையை தீர்க்க நேற்றய நிகழ்ச்சியில் கூட முதல் முறையாக குறும்படம் போடப்பட்டது. ஆனால், அந்த குறும்படம் கூட எதோ ஒப்புக்கு இருந்தது. இந்நிலையில் கமலின் அருமை தற்போது தான் தெரிகிறது. விரைவில் கமல் குணமாகி மீண்டும் பிக் பாஸுக்கு வர வேண்டும் என்று நெடிசன்கள் கூறி வருகின்றனர்.
Felt bad for Ciby .. Actually he did a gud job but no appreciation from Ramya krishnan Mam .. Missing you @ikamalhaasan Sir.. 😥😥Get well soon Sir ❤️
— Swetha Elvina (@ElvinaSwetha) November 28, 2021