ஜி.பி முத்துவை நேரடியாக கேள்வி கேட்ட கமல்! எமோஷனலான வீடியோ!
பிக் பாஸ் சீசன் 6 இல் 21 போட்டியாளர்களுடன் துவங்கிய நிலையில் ஒரே வாரத்தில் சண்டை சச்சரவு என பல நாட்கள் ஒன்றாக இருந்தவர்களின் அனுபவங்களை ரசிகர்களுக்கு கொடுத்து விட்டனர் போட்டியாளர்கள்.
இந்த சீசனில் முக்கிய போட்டியாளராகக் கலந்து கொண்டிருப்பவர் தான் ஜி.பி முத்து.இந்த நிகழ்ச்சியில் அவருடைய வெள்ளேந்தியான பேச்சும், அவரது குறும்பு மிக்க நடவடிக்கைகளும் வீட்டை மேலும் சுவாரஸ்யமாக்கியுள்ளது.
அதனிடையே அவர் குறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் தினந்தோறும் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.
அதே நேரத்தில் தனது குடும்பத்தினரை விட்டு பிரிந்து இருக்கமுடியவில்லை என தெரிவித்துவந்த GP முத்து, பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற இருப்பதாக கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள ப்ரோமோ வீடியோவில், கமல்ஹாசனிடம் கண்கலங்கியபடி முத்து பேசியிருக்கிறார்.
அதில் கமல்ஹாசன் பேசுகையில்,"முத்து, நீங்க அலைபாஞ்சுகிட்டே இருக்கீங்க.. நாலஞ்சு நாட்களாக அது அதிகமான மாதிரி எனக்கு தோணுது. சொல்லுங்க என்ன பிரச்சனை?" எனக் கேட்கிறார்.
#Day13 #Promo3 of #BiggBossTamil #BiggBossTamil6 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/r14b20iN6r
— Vijay Television (@vijaytelevision) October 22, 2022
இதற்கு பதில் அளித்த முத்து,"எனக்கு என் பையனை பாக்கணும். உடம்பு சுகமில்லை அவனுக்கு" என்கிறார். தொடர்ந்து பேசும் கமல்,"உங்களை ரசிக்கிறவங்க நிறைய பேரு இருக்காங்க.
இதை உங்க பிள்ளைகள் கேட்டுட்டு இருக்காங்க. விஷ்னு கேட்டுட்டு இருக்காரு இந்த கைதட்டல்களை எல்லாம். உங்க முடிவு என்ன?" என நேரடியாக முத்துவிடம் கேட்கிறார்.
அப்போது கண்கலங்கியபடி பேச முற்படுகிறார் முத்து.இது குறித்த வீடியோ வைரலாகி வருவதைக் காணலாம்.