களுத்துறை மாணவி மரணம்; சந்தேக நபர் தொடர்பில் மொட்டு எம்பி வெளியிட்ட தகவல்
களுத்துறை பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் களுத்துறை மாவட்டத்தில் இடம்பெற்ற போராட்ட குழுவின் பிரதான அமைப்பாளராகவும் தலைவராகவும் செயற்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதனை பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன இன்று சபையில் தெரிவித்துள்ளார்.
மூன்று திருமணங்களை முடித்தவர்
பாடசாலை மாணவியின் மர்ம மரணம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் பொலிஸாரிடம் இருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று காலை ஹிக்கடுவ பிரதேசத்தில் மறைந்திருந்த போது களுத்துறை தெற்கு பொலிஸ் விசேட பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
16 வயதுடைய பாடசாலை மாணவிக்கு நடந்தது என்ன என்றும் அது கொலை அல்லது மாணவி மாடியில் இருந்து பாய்ந்தாரா என்பது தெரியவில்லை என்றும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் மூன்று திருமணங்களை முடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இது அவர் கடந்த காலத்தில் செய்த தீவினைகளுக்கான தண்டனை என்றும் ரோஹித அபேகுணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்