களுத்துறை போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரி மாயம்!
களுத்துறை போதனா வைத்தியசாலையின் உதவி நீதி வைத்திய அதிகாரி (ஜேஎம்ஓ) காணாமல் போயுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
மவ்பிமவின் தகவலின்படி, வைத்தியர் எல்.சி. ஜெயசிங்க காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமற்போன வைத்தியரின் மனைவி வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் காணாமல் போனமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வைத்தியர் பயணித்த வாகனம் பாலமொன்றுக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் சனிக்கிழமை (14) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மருத்துவர் ஆற்றில் விழுந்தாரா இல்லையா என்பதை ஆய்வு செய்வதற்காக இரண்டு படகுகள் மூலம் களுகங்கையில் தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .