களுத்துறை துப்பாக்கிச் சூடு கார் கண்டுபிடிப்பு
களுத்துறை, வெட்டுமகட பகுதியில் வர்த்தகர் ஒருவரைச் சுட்டுக் கொன்ற சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கார், தெபுவன - நொபட பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
தெபுவன - நொபட தபால் நிலையத்திற்கு அருகிலேயே குறித்த கார் மீட்கப்பட்டுள்ளது. இன்று (28) காலை களுத்துறை, வெட்டுமகட பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரை இலக்கு வைத்து, காரில் வந்த துப்பாக்கிதாரி ஒருவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருந்தார்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர், களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். தலைமறைவாகியுள்ள சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.