மனைவி பணிப்பெண் அல்ல; சமையல் செய்யவில்லை என விவாகரத்து கோரிய கணவனுக்கு நீதிமன்றம் பதிலடி
மனைவி சமையல் செய்யவில்லை என விவாகரத்து கோரிய கணவருக்கு, திருமண உறவில் மனைவியை கணவன் பணிப்பெண் போல நடத்த முடியாது என மும்பை உயர் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
திருமணம் என்பது சமத்துவ அடிப்படையில் அமைந்த வாழ்க்கை பந்தம் என்றும், மனைவி வீட்டுப்பணிகளை கட்டாயமாக செய்ய வேண்டியவர் அல்ல என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

மனைவிக்கு வீட்டு வேலைகளை கட்டாயப்படுத்த முடியாது
“மனைவி சமையல் செய்யவில்லை” என்ற காரணத்தை முன்வைத்து கணவர் விவாகரத்து கோரியிருந்த நிலையில் , அதை நீதிமன்றம் ஏற்கவில்லை. மனைவிக்கு வீட்டு வேலைகளை கட்டாயப்படுத்த முடியாது சமையல் செய்யாதது மட்டும் குடும்ப உறவை முறியடிக்கும் காரணமாக அமையாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
திருமணம் என்பது ஒரு தரப்பு ஆணையிடும் உறவு அல்ல, இருவரும் சமமாக நடத்தப்பட வேண்டிய பிணைப்பு எனவும் நீதிமன்றம் சுட்டிகாட்டியுள்ளது. திருமணம் என்பது ஒருவரை மற்றவர் கட்டுப்படுத்தும் அமைப்பு அல்ல. கணவரும் மனைவியும் ஒருவரை ஒருவர் மதித்து, பரஸ்பர புரிதலுடன் வாழ வேண்டும்.
“மனைவி வீட்டில் எல்லா வேலைகளையும் செய்யவேண்டும்” என்ற எண்ணம் சட்டரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஏற்க முடியாதது என்று நீதிமன்றம் கூறியுள்ளது . கணவர் தாக்கல் செய்த விவாகரத்து மனுவை விசாரித்த நீதிமன்றம், மனைவியின் நடத்தை திருமணத்தை முற்றாக சிதைக்கும் அளவுக்கு இல்லை என்று கருத்து தெரிவித்தது.
சமையல் செய்யவில்லை என்பதையே பிரதான காரணமாக கொண்டு விவாகரத்து கோர முடியாது என்பதையும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது இந்த னிலை மும்பை நிதிமன்றின் இந்த தீர்ப்பு, குடும்ப நீதிமன்றங்களிலும், திருமண விவாதங்களிலும் முக்கிய முன்னுதாரணமாக மாறலாம் என சட்ட வல்லுநர்கள் கருதுகின்றனர்.