தென்னிந்திய இசை நிகழ்ச்சியில் அசத்தும் சிறுமி கில்மிசாவின் குடும்பத்தை சந்தித்த முக்கியஸ்தர்!
பிரபல தென்னிந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமபா நிகழ்ச்சியில் கொடிகட்டிப் பறக்கும் ஈழத்துக் குயில் கில்மிசாவின் தந்தை மற்றும் சகோதரரை அவரது வீட்டில் சென்று மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகர் சந்தித்து பேசியுள்ளார்.
சந்திப்பின்போது, கில்மிசாவும் வீடியோ கால் செய்து அவருடன் உரையாடியுள்ளார்.
கில்மிசா... மகளே... உனது ஆற்றலைக் கண்டு இன்று உலகமே அதிர்ந்துப் போயுள்ளது.
உனது குரலின் ஆளுமையைக் கண்டு அதிர்ந்துப் போயிருக்கிறது.
இப்போது நீ உனது குடும்பதற்கு மட்டும் சொந்நதமான பிள்ளையல்ல. உலகவாழ் கலைக் குடும்பத்திற்கு சொந்தமான பிள்ளையாகும்.... வா! வென்று வா! உனது நிலம் வெற்றிக் கொடி கட்ட காத்திருக்கிறது என அவர் சிறுமி கில்மிசாவை உற்சாகப்படுத்தியுள்ளார்.