குரு-சுக்கிரனால் உருவாகியுள்ள லாப யோகம் ; இந்த ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்
சுமார் 12 ஆண்டுகள் கழித்து மிதுன ராசியில் பயணித்து வரும் தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவானும், அழகு, ஆடம்பரம், காதல் செல்வம் ஆகியவற்றின் காரணியாகவும், அசுரர்களின் குருவாகவும் கருதப்படும் சுக்கிரனும் தங்கள் நிலைகளின் மூலம் லாப திருஷ்டி யோகத்தை உருவாக்கியுள்ளனர்.
இந்த லாப திருஷ்டி யோகமானது அக்டோபர் 08 ஆம் திகதி உருவாகியுள்ளது. இந்த யோகத்தின் போது குருவும், சுக்கிரனும் ஒன்றுக்கொன்று 60 டிகிரி கோணத்தில் இருக்கும்.
அதிர்ஷ்டம் கிட்டும் ராசிக்காரர்கள்
இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் இந்த யோகத்தால் பிரகாசிக்கும்.
தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு லாப யோகத்தால் சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு லாப திருஷ்ட யோகத்தால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்களும் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும்.
ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்கள் லாப திருஷ்டி யோகத்தால் ஆளுமையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். திருமணமானவர்கள் நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வார்கள். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். வங்கி இருப்பு அதிகரிக்கும். வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.