அஸ்தமனமாகும் குரு பகவான் ; வாழ்வில் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்
நவகிரகங்களில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார். தற்போது குரு பகவான் கடக ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் ஜூலை 14 ஆம் திகதி குரு பகவான் அஸ்தமனமாகவுள்ளார். இந்த நிலையில் ஆகஸ்ட் 12 ஆம் திகதி வரை இருந்து, பின் உதயமாவார். அதாவது இக்காலகட்டத்தில் குரு சூரியனுக்கு மிக அருகில் வருவதால், மிகவும் பலவீனமாக இருப்பார். அதில் சில ராசிக்காரர்களுக்கு மோசமாக இருந்தாலும் சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தைக் காண்பார்கள்.

அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்
மேஷம்: மேஷ ராசியின் 4 ஆவது வீட்டில் குரு பகவான் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு வருமானத்தில் உயர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், வெற்றிகள் குவியும். கூடுதல் வருமான ஆதாரங்களும் உருவாகும் வாய்ப்புள்ளது.
கடகம்: மாணவர்கள் கடினமாக உழைத்து படித்தால், நல்ல வெற்றியைப் பெற வாய்ப்புள்ளது. நீண்ட நாள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் முழு ஆதவு கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் பாராட்டப்படும். நல்ல நிதி ஆதாயங்கள் உருவாகும். இலக்குகளில் எவ்வளவு கவனம் செலுத்துகிறீர்களோ, அந்த அளவில் வெற்றியைப் பெறுவீர்கள்.
தனுசு: தனுசு ராசியின் 8 ஆவது வீட்டில் குரு பகவான் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்வில் பல நல்ல மாற்றங்களைக் காண்பார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நிதி நிலைமை வலுவடையும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். குடும்பத்திற்குள் உங்களின் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.