பிணையில் விடுதலையானார் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ!
கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகேவின் இல்லத்திற்கு இன்று மாலை (09-06-2022) சரணடைவதற்காக வந்த ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு (Johnston Fernando) பிணை வழங்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டார், ஒவ்வொன்றும் ரூ. 10 மில்லியன். இன்று காலை 8.00 மணிக்கு முன்னர் நீதிமன்றில் சரணடையுமாறு முன்னாள் அமைச்சருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று (ஜூன் 09) அவரை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தம்மைக் கைது செய்வதைத் தடுக்கும் நீதிமன்ற உத்தரவைக் கோரிய நாடாளுமன்ற உறுப்பினர் பெர்னாண்டோ தாக்கல் செய்த ரிட் மனுவைக் கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவை இரவு 8.00 மணி வரை அமுல்படுத்த வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் பெர்னாண்டோ இன்று மாலை கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகேவின் மஹரகமவில் உள்ள இல்லத்தில் ஆஜராகியதையடுத்து, விரைவில் அந்த வளாகத்தை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான தகவல்கள்:
சற்றுமுன்னர் சரணடைந்தார் ஜோன்ஸ்டன்