மனைவியுடன் தீபாவளி கொண்டாடிய ஜோ பைடன்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) வாழ்த்து தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் தனது மனைவியுடன் குத்து விளக்கேற்றி தீபாவளி பண்டிகையை ஜோ பைடன் (Joe Biden) கொண்டாடினார்.
அமெரிக்காவில் வாழும் இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் ஜோ பைடன் (Joe Biden) கூறியிருந்தார்.
அத்துடன் , இருளில் இருந்து ஞானம், பிரிவில் இருந்து ஒற்றுமை, ஏமாற்றத்தில் இருந்து நம்பிக்கை ஆகியவற்றை தீபாவளி திருநாள் நமக்கெல்லாம் நினைவுப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
May the light of Diwali remind us that from darkness there is knowledge, wisdom, and truth. From division, unity. From despair, hope.
— President Biden (@POTUS) November 4, 2021
To Hindus, Sikhs, Jains, and Buddhists celebrating in America and around the world — from the People’s House to yours, happy Diwali. pic.twitter.com/1ubBePGB4f
இதேவேளை துணை அதிபர் கமலா ஹாரிஸூம் உலகம் முழுவதும் தீபாவளியை கொண்டாடும் இந்தியர்களுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.
அதே போல், ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸூம் (António Guterres)தீபாவளி வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டிருந்தார்.
மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, முதல் முறையாக நியூயார்க்கில் புகழ்பெற்ற கட்டடங்கள் மின்னொளியில் ஜொலித்ததுடன் , ஹட்ஸன் நதியின் இருகரைகளிலும் வாண வேடிக்கை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டிருந்தன.