போலந்து எல்லையில் அமெரிக்க வீரர்களுடன் உணவருந்திய ஜோபிடன்!
போலந்து உக்ரைன் எல்லையில் உள்ள தளத்தில் அமெரிக்க படையிரை சந்தித்து ஜோ பைடன் (Joe biden) உணவருந்தியுள்ளார்.
இதன்போது உலகின் சுதந்திரத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி அமெரிக்க படையினருக்கு அவர் தெரிவித்துள்ளார். ஐரோப்பாவில் படையினரை நிறுத்தியுள்ளதை ஏதேச்சதிகாரத்திற்கும் ஜனநாயகத்திற்குமான போராட்டத்தின் ஒரு பகுதி என பைடன் (Joe biden) கூறினார்.
உலகின் வரலாற்றிலேயே மிகத்திறமையான இராணுவத்தினர் நீங்களே நீங்கள் ஈடுபட்டுள்ள நடவடிக்கை காரணமாக சாதகமான விளைவுகள் ஏற்படும் எனவும் பைடன் (Joe biden) நம்பிக்கை வெளியிட்டார்.
அத்துடன் உங்களின் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் எவ்வாறான சுதந்திரத்தை அனுபவிக்கப்போகின்றனர் என்ற விடயத்திற்கே தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ள பைடன் (Joe biden), உக்ரைன் மக்களின் வேதனைகளையும் துன்பத்தையும் உங்களால் போக்க முடியுமா என்பதை விட முக்கியமான விடயத்தில் நீங்கள் ஈடுபட்டுள்ளீர்கள் எனவும் அமெரிக்க படையினருக்கு தெரிவித்துள்ளார்.
அதேவேளை பெப்ரவரி மாதம் முதல் அமெரிக்கா ஐரோப்பாவிற்கு 12000 படையினரை அனுப்பியுள்ளது,இவர்களில் பலர் போலந்தில் நிலைகொண்டுள்ளனர்.
இந்நிலையில் நேட்டோ நாடுகளை ரஸ்யா அச்சுறுத்துவதை தடுப்பதற்காகவும் மனிதாபிமான உதவிகளிற்காகவும் இவர்களை நிலைகொள்ளச்செய்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



