தமிழர் பகுதியில் பொலிஸாரின் அதிரடி ; 80 இலட்சம் பெறுமதியான நகைகள் மீட்பு
வவுனியாவில் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான 35 பவுன் தங்க நகைகளை மீட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் இன்று (05) தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை
கடந்த இரு தினங்களுக்கு முன்பு வவுனியா, கணேசபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 35 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டன.
இச்சம்பவம் தொடர்பாக நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், நெளுக்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.எம்.ஏ. சமரகோன் தலைமையில், உப பொலிஸ் பரிசோதகர் எல்.எஸ். வீரசிங்க, பொலிஸ் கான்ஸ்டபிள்களான நிரோஜன் (8137), தீபன் (80998) ஆகியோர் அடங்கிய குழுவினரால் விசேட விசாரணை முன்னெடுக்கப்பட்டது.
இதன் பயனாக, வவுனியா, கொக்குவெளி பகுதியில் 29 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து திருடப்பட்ட 35 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.