யாழில் கொள்ளையடித்த 10 இலட்சத்திற்கும் பெறுமதியான நகைகள் மீட்பு! ஒருவர் அதிரடி கைது
யாழ் மல்லாகம் பகுதியில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் ஒன்றில் திருடப்பட்ட 10 இலட்சம் ரூபாவுக்கு பெறுமதியான நகைகள் தெல்லிப்பழை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரொருவரையும் கைது செய்துள்ளானர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மல்லாகம் பகுதியில் நேற்றைய தினம் (19-02-2023) வீடொன்றில் 10 இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான நகைகள் திருடப்பட்டதாக தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் பொலிஸ் பரிசோதகர் கலாவினோதன் தலைமையிலான தெல்லிப்பழை குற்றத்தடுப்பு பொலிஸார் இன்றைய தினம் (20-02-2023) சந்தேக நபரையும் திருடப்பட்ட நகைகளையும் மீட்டனர்.
சந்தேக நபரையும் மீட்கப்பட்ட நகைகளையும் நாளைய தினம் (21-02-2023) மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.