எகிறும் தங்கவிலையால் அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!
அக்டோபர் மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் தங்கவிலை இன்றுமதிரடியாக உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
இன்றைய தங்கவிலை நிலவரம்
அதன்படி, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,705 ஆகவும், சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் ரூ.45,640 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,673 ஆகவும், சவரனுக்கு ரூ.32 உயர்ந்து ஒரு சவரன் ரூ.37,384 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
அதேவேளை வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.50 ரூபாய் ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.77,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.