சபையில் ஜீவன் தொண்டமான் பாச்சல்!
தொண்டமான் இவ்வளவு காலமாக அரசியலில் இருந்தார் என்ன செய்தார், என்றெல்லாம் கூறுகின்றனர். நாங்கள் இவ்வளவு காலம் இருந்தமையினால் தான் இந்த நாட்டில் தோட்ட மக்கள் வாழ்கின்றார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
அத்துடன் தொண்டமான் எனும் நாமத்தை எவ்வளவு விமர்சித்து அரசியல் செய்ய முடியுமோ அதனை செய்யுங்கள்.
அவ்வாறு செய்து எம் மக்களுக்கு மாற்றத்தை கொண்டு வர முடியுமென்றால் அதனை கொண்டு வாருங்கள் என கூறிய அவர், நாங்கள் அரசியல் மேடையில் தேவையான ஒத்துழைப்பை வழங்குகின்றோம் எனவும் கூறினார்.
நாடாளுமன்றத்தில் இன்று (07) நடைபெற்ற தோட்டங்கள் சார்ந்து காணப்படுகின்ற வீதிகளை அரசாங்கத்திற்கு சுவீகரிக்க வேண்டுமென வலியுறுத்தி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகேவினால் முன்வைக்கப்பட்ட தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் உரையாற்றுகையில் ஜீவன் தொண்டமான் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.