நாம் 200 நிகழ்வு; மனோகணேசன் மீது குறைகூறும் ஜீவன்
நாம் 200 நிகழ்வுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
பெரும்பான்மை இனத்தை சேர்ந்த எதிரணி அரசியல் தலைவர்கள் கூட நிகழ்வுக்கு வருகைத் தந்திருந்த நிலையில், என் சமூகத்தை சார்ந்த அரசியல் தலைவர்கள் வராமை கவலையளிக்கின்றது என்றும் விசனம் தெரிவித்துள்ளார்.
அழைப்பிழை எதிர்பார்க்க கூடாது
அதோடு எமது சமூகத்துக்கான நிகழ்விற்கான அழைப்பிழை எதிர்பார்க்க கூடாது இருந்தாலும் அழைப்பிதழ் அனுப்பியுள்ளோம் என, மனோ கணேசனிடம் கூறியிருந்தாகவும ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.
நாம் 200 நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கப்படாததால் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் நிகழ்வை புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.