ஈஸ்டர் தாக்குதல் ; நிலந்த ஜயவர்தனவுக்கு ஒழுக்காற்று விசாரணைகள் ஆரம்பம்
ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய, நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடக் கோரிய மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அதன்போது, நிலந்த ஜயவர்தன சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சந்தக ஜயசுந்தர நீதிமன்றில் இதனை அறிவித்தார்.
அதன்போது, மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி இந்த மனுவில் உள்ள விடயங்களை உறுதிப்படுத்துவதற்குத் திகதியொன்றை வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.
அதன்போது, நிலந்த ஜயவர்தன சார்பில் முன்னிலையான சட்டத்தரணி உயர் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் பிரகாரம், தமது சேவைபெறுநருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றுக்கு அறிவித்தார்.