மூன்று மாத காலம் கடுமையான விரதமிருந்து கதிர்காமம் வந்த ஜப்பானிய முருக பக்தர்கள்!
மூன்று மாத காலம் மாமிச உணவுகளைத் தவிர்த்து, கடுமையான விரதமிருந்து ஜப்பானில் இருந்து வருகை தந்துள்ள பௌத்த பக்தர்கள் குழுவொன்று வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமம் புனித பூமியை வந்தடைந்து வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளது.
ஒன்பது பேரைக் கொண்ட இந்த ஜப்பானியப் பக்தர்கள் குழுவினர் கதிர்காமம் புனித பூமியில் தங்கியிருந்து, அங்குள்ள மக்களுக்குத் தான தர்மங்களை வழங்கியுள்ளதுடன் கதிர்காமக் கந்த பெருமானை வேண்டி விசேட வழிபாடுகளையும் முன்னெடுத்துள்ளனர்.

கதிர்காமக் கடவுளுக்காக இவர்கள் மூன்று நாட்கள் தொடர்ச்சியாகப் பூஜைகளை நடாத்தியுள்ளனர். தமது இந்த ஆன்மீகப் பயணம் குறித்து ஜப்பானியப் பெண் பக்தர் ஒருவர் கருத்து வெளியிடுகையில், தான் சுமார் 25 வருடங்களுக்கு முன்பே முதன்முறையாகக் கதிர்காமத்திற்கு வருகை தந்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.
அத்துடன் , கதிர்காமக் கந்த பெருமானுடன் தமக்குள்ள ஆன்மீகத் தொடர்பு காரணமாகவே அன்றிலிருந்து இன்றுவரை கதிர்காமத் தெய்வத்துக்காகத் தாம் இந்தத் தொடர் வழிபாடுகளையும் விரதங்களையும் மேற்கொண்டு வருவதாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.