நான் அப்பாவியும் கிடையாது .... என்னை மாதிரி கெட்டவளும் யாரும் கிடையாது; வைரலாகும் ஜனினியின் பன்ச் ! (Video)
பிக்பாஸ் 6 ஆவது சீசன் பரபரப்புக்கு பஞ்சமில்லால் சென்றுகொண்டிருக்கும் நிலையில் ஜனினி பேசிய பன்ச் வசனம் வைரலாகி வருகின்றது.
பொம்மை டாஸ்க் கொடுத்து போட்டியாளர்களை மோதவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் பிக் பாஸ். முதல் ப்ரொமோ வீடியோவில் மணிகண்டன் பன்ச் வசனம் பேசினார்.
இந்நிலையில் இரண்டாவது வீடியோவில் ஜனனி டயலாக் விட்டிருக்கிறார். அந்த ப்ரொமோவில் ஜனனி,
என்னை மாதிரி கெட்டவள் இந்த உலகத்துல யாருமே இருக்க முடியாது. என்னை மாதிரி அப்பாவியும் கிடையாது. என்னை மாதிரி கெட்டவளும் கிடையாது என தெரிவித்துள்ளார்.
#Day16 #Promo2 of #BiggBossTamil #BiggBossTamil6 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/FjWD5jhRet
— Vijay Television (@vijaytelevision) October 25, 2022
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் புள்ள பூச்சிகள் எல்லாம் இன்று கோபப்படுகிறார்கள், பன்ச் டயலாக் பேசுகிறார்கள். முதலில் மணிகண்டன், இப்போ ஜனனி. ஆனால் ஜனனி பன்ச் விடுவதை பார்க்க காமெடியாக இருக்கிறது. அவர் சொல்வதை கேட்டு சிரிப்பு, சிரிப்பாக வருகிறது.
ஆங்கிரியா பேச வேண்டியதை ஜாங்கிரி மாதிரி பேசியிருக்கிறார் என்கிறார்கள் பிக்பாஸ் ரசிகர்கள்.