சிசிடிவி கட்டுப்பாட்டு அறையில் ஜனநாயகன் பார்த்த ஊழியர்!
சென்னை அண்ணா பல்கலைக்கழக சிசிடிவி கட்டுப்பாட்டு அறையில் தொழில்நுட்பத் தலைவராகபணியாற்றிய ஊழியர் ஒருவர், தனது பணியின் போது சட்டவிரோதமாக தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்தைப் பார்த்துள்ளார்.
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் விதிமீறல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்களை செய்தி வெளியிட்டுள்ளன.

அவர் படம் பார்த்ததை கைபேசியில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதையடுத்து, தேர்தல் ஆணைய அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்தனர்.
பாதுகாக்கப்பட்ட பகுதியில் தொலைபேசி பயன்படுத்தியது மற்றும் பணியில் கவனக்குறைவாக இருந்தமை ஆகிய காரணங்களுக்காக குறித்த நபர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
இந்த நிலையில், விசாரணைகளை தொடர்ந்து குறித்த நபர் விடுவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பதிவான வாக்குகள் அனைத்தும் எதிர்வரும் மே 4ஆம் திகதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதுவரை வாக்கு எண்ணும் மையங்களில் எவ்வித அசம்பாவிதங்களும் நிகழாமல் தடுக்க அதிநவீன கண்காணிப்பு கருவிகள் மற்றும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.