பசிலுக்கு அழைப்பு எடுத்த ஜெய்சங்கர்!
நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் தொலைபேசி உரையாடலொன்றை மேற்கொண்டுள்ளார்.
இலங்கைக்கான பொருளாதார உதவியை இந்தியா நீடிப்பது குறித்து அவர்கள் உரையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆக்கபூர்வமான சுமூகமான உரையாடலில் ஈடுபட்டார் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
அனைத்து சாதகமான வழிகளிலும் இந்தியா இலங்கைக்கு உதவும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
இந்தியாவிற்கு இந்த மாதம் பசில் ராஜபக்ச விஜயம் மேற்கொள்வதற்கான இருதரப்பிற்கும் பொருத்தமான திகதியை தீர்மானிப்பது உள்ளிட்ட விடயங்கள் உரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.