யாழ்ப்பாண Youtuber கிருஷ்ணா மீண்டும் சிறையில் அடைப்பு; நீதிமன்றம் உத்தரவு
யாழ்ப்பாண Youtuber கிருஷ்ணாவை எதிர்வரும் ஏப்ரல் 02ம் திகதி வரை மீண்டும் சிறையில் அடைக்க மல்லாகம் நீதிமன்றம் இன்றைய தினம் (19) உத்தரவு பிறப்பித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் வீட்டினுள் இரவு வேளை நுழைத்து , அநாகரிகமாக நடந்து கொண்டதுடன் பெண்ணொருவரை அவமானப்படுத்துவது போன்று வெளியான காணொளி சர்ச்சையாக மாறி இருந்தது .
சர்ச்சை காணொளி - வழக்குத் தாக்கல்
அந்த காணொளி தொடர்பில் Youtuber கிருஷ்ணா உட்பட நால்வர் கைதாகி இருந்தனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு கிருஸ்ணா மீது மல்லாகம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், யூடியூப்பர் உள்ளிட்ட நால்வரையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டிருந்த்து.
இதனையடுத்து இன்றைய தினம் (19) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே Youtuber கிருஷ்ணாவை , எதிர்வரும் ஏப்ரல் 02ம் திகதி வரை மீண்டும் சிறையில் அடைக்க மல்லாகம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.