யாழில் இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்! சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்
யாழ்.கொழும்புத்துறையில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் இன்று (08-03-2022) செவ்வாய்க்கிழமை மதியம் இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த சம்பவத்தில் கொழும்புத்துறையைச் சேர்ந்த 29 வயதான சு.சுதர்சன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
சீமெந்து கல் அரியும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மின்சார வயரில் இருந்து ஏற்பட்ட மின் ஒழுக்கால் கல் அரியும் இயந்திரத்துக்கு மின் பாய்ந்துள்ளது.
இதனால் இயந்திரத்தை இயக்கிய இளைஞர் மின் தாக்கத்துக்கு இலக்கானார் என்றும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறப்பு விசாரணைகளை யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டுள்ளார்.