கட்டாரில் பயங்கர சம்பவம்: யாழை சேர்ந்த இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த சோகம்!
கட்டாருக்கு பணிபுரிவதற்காக சென்றிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கட்டார் நாட்டிற்கு தொழில் நிமிர்த்தம்சென்று 26 நாட்களே ஆன நிலையில் வாகன விபத்தில் சிக்கி யாழ்ப்பாணம் - நவக்கிரியை சேர்ந்த 24 வயதான டிபில்ஸ்குமார் துவிகரன் என்ற ஒரு பெண் பிள்ளையின் தந்தையை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் அல்வாய் மனோகரா பகுதியில் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் பெண்ணொருவரை காதல் திருமணம் செய்துள்ளார்.
இவ்வாறான நிலையில், உயிரிழந்த இளைஞனின் சடலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதுடன் இன்றைய தினம் (24-01-2023) இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றது.
இதேவேளை குறித்த சம்பவமானது அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.