உறவினர் வீட்டிற்கு சென்று வீடு திரும்பியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! யாழில் சம்பவம்
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இலத்திரனியல் உபகரணங்கள் திருடப்பட்டுள்ளன.
குறித்த திருட்டு சம்பவம் இன்றையதினம் (19-10-2022) இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
குறித்த வீட்டில் இரண்டு வயோதிப பெண்கள் வசித்துவந்த நிலையில் அவர்கள் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மட்டக்களப்பில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தனர்.
மட்டக்களப்பு சென்றவர்கள் இன்றையதினம் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தவேளை 2 தொலைக்காட்சி பெட்டிகள் உள்ளிட்ட மேலும் பல இலத்திரனியல் உபகரணங்கள் களவாடப்பட்டமை தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.