யாழில் இருந்து கொழும்பு சென்ற பேருந்து முற்றாக எரிந்து நாசம் (Photos)
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த சொகுசு பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.
இதனால் பேருந்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மதுரங்குளிய கரிகெட்டிய பிரதேசத்தில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மதுரங்குளி பொலிஸாருடன் இணைந்து புத்தளம் நகர சபை தீயணைக்கும் பிரிவினரும், இலங்கை விமானப் படையின் பாலாவி முகாமைச் சேர்ந்த விமானப் படையினரும், பொதுமக்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் குறித்த பஸ் முழுமையாக எரிந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
எப்படியிருப்பினும் இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும் தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.