தொண்டமானாறு செல்வ சந்நிதியான் ஆலயத்திலும் தடுப்பு வேலிகள்!
யாழ்ப்பாணத்தின் வரலாற்று பிரசித்தி பெற்ற ஆலயங்களுள் ஒன்றான தொண்டமானாறு செல்வ சந்நிதியான் ஆலயத்திற்கும் முகப்பிற்கு கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது.
சன்னிதியானை காண வரும் அடியவர்கள் இடையூறின்றி சென்று சந்நிதியானை வணங்குவதற்கும், ஆலய வளாகத்திற்குள் வாகனங்கள் உட்செல்வதால் ஏற்படும் நெரிசலை குறைப்பதற்காகவும், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

ஆலயத்தின் புனித தன்மையை பேண...
அதுமட்டுமல்லாது வழிபாடுகள் தவிர்ந்த ஏனைய தேவையற்ற செயற்பாடுகளை தவிர்ப்பதற்காகவும், ஆலயத்தின் புனித தன்மையை பேணுவதற்காகவும் இந்த தடுப்பு வேலி ஆலய முகப்பில் போடப்பட்டுள்ளது.
அதெவேளை தற்போது முகப்பில் மட்டுமே வேலி. ஏனைய இடங்களுக்குள்ளால் வாகனங்களை இறக்க இயலாத ஏற்பாடுகள் முன்னரே செய்துவைக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் காலத்தின் தேவை கருதி வேலி அமைக்கப்பட்டுள்ளமையானது வரவேற்கத்தக்கது என சன்னதியான் அடியவர்கள் பதிவிட்டு வருகின்றனர். அதேவேளை நல்லூர் கந்த சுவாமி ஆலயத்திலும் ஆலய தூய்மையை பேணுவதற்காக கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
