யாழ். செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாய்வு தீவிரம்

Human Rights Council Sri Lanka Court of Appeal of Sri Lanka chemmani mass graves jaffna
By Sahana May 06, 2026 12:53 AM GMT
Report

இலங்கையின் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வு ஆரம்பமாகி எட்டு நாட்களின் பின்னர் கண்டறியப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 254 ஆக உயர்ந்துள்ளது.

இரகசியம் பேண உறுதி ; கணக்காய்வுக் குழுவில் புதிய முகங்கள்

இரகசியம் பேண உறுதி ; கணக்காய்வுக் குழுவில் புதிய முகங்கள்

செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியில் இருந்து 249 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும், நேற்றைய தினம் (05 ஏப்ரல்) ஒரு குழந்தையின் எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் முன்னிலையாகும் மனித உரிமைகள் சட்டத்தரணி ரனிதா ஞானராஜா தெரிவித்துள்ளார்.

“ஐந்து எலும்புக்கூடுகள் சுத்தப்படுத்தப்பட்டு இலக்கம் இடப்பட்டுள்ளது. இரண்டு எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாய்வு தீவிரம் | Jaffna Third Phase Of Excavation Of Semmani Human

இதற்கமைய அகழ்ந்து எடுக்கப்பட்ட மொத்த எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 249. அகழ்ந்து எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் ஒன்று சிறு குழந்தையினுடையது.

” மேலும் அவர், சவப்பெட்டியில் புதைக்கப்பட்டது போன்ற ஒரு எலும்புக்கூடும் தோண்டி எடுக்கப்பட்டதாகவும், எரிந்த நிலையில் இருந்த பல எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டதாகவும் கூறினார்.

அகழ்வாய்வு ஆரம்பமான நாள் முதல் இன்று வரை (05 ஏப்ரல்) புதைகுழியிலிருந்து சில நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி ரனிதா குறிப்பிட்டுள்ளார்.

"ஆரம்பித்தநாள் முதல் இன்று வரை சில நாணய குற்றிகள், தங்க ஆபரணம் எனக் கூறக்கூடிய ஆபரணம் ஒன்றும் எடுக்கப்பட்டுள்ளன."

அகழ்வுப் பணிக்கு அரசாங்கத்திடமிருந்து 2.1 மில்லியன் ரூபாய் நிதி கிடைக்கப்பெற்றதை அடுத்து, செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வுப் பணிகள் 27 ஏப்ரல் 2026 அன்று யாழ்ப்பாண நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் ஆரம்பமானது.

நீதிமன்ற உத்தரவின் பேரில் தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரது வழிநடத்தலில் யாழ்ப்பாணம், செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் முதன்முறையாக 2025 மே 15ஆம் திகதி ஆரம்பமாகின.

மின்சாரக் கட்டணத்தில் மாற்றம் வருமா? தீர்வு தேடும் ஆலோசனை

மின்சாரக் கட்டணத்தில் மாற்றம் வருமா? தீர்வு தேடும் ஆலோசனை

45 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் 2025 செப்டம்பர் 06ஆம் திகதி மதியம் நிறைவடைந்த போது, மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் உள்ளிட்ட 240 மனித எலும்புக்கூடுகளில் ஒன்றைத் தவிர அனைத்து எலும்புக்கூடுகளும் அகழ்ந்து எடுக்கப்பட்டிருந்தன.

அகழ்வாய்விள் இரண்டாம் கட்டத்தின் போது மீட்கப்படாத மனித எலும்புக்கூடு இன்னும் மீட்கப்படவில்லை எனவும், அது பாதுகாக்கப்படுவதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி. எஸ். நிரஞ்சன், ஏப்ரல் 30, 2026 அன்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.

செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழியிலிருந்து மனித எலும்புகளுடன் இதுவரை அகழ்ந்து எடுக்கப்பட்ட ஏனைய பொருட்களுள் பால் போத்தல், பொம்மை உள்ளிட்ட விளையாட்டுப் பொருட்கள், சிறுவர் காலணிகள் மற்றும் பாடசாலைப் பைகளும் உள்ளடங்குகின்றன.

28 சிறுவர்கள் உட்பட 376 மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட மன்னார் சதொச மனிதப் புதைகுழியானது இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப்பெரிய மனிதப் புதைகுழியாக கருதப்படுகிறது.

புதிய சைபர் மோசடி அலை ; போலி வாட்ஸ்அப் வீடியோ அழைப்புகள் மூலம் பண மோசடி

புதிய சைபர் மோசடி அலை ; போலி வாட்ஸ்அப் வீடியோ அழைப்புகள் மூலம் பண மோசடி

மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US