யாழ்.போதனா வைத்தியசாலையில் பரிதாபமாக உயிரிழந்த கைக் குழந்தை!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் திடீர் மூச்சுத் திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்ட ஒன்றரை வயதுக் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இவ்வாறு உயிரிழந்த ஒன்றரை வயது பெண் புங்குடுதீவு 12ஆம் வட்டாரத்தைச் சேர்ந்தவர் என தெரிவந்துள்ளது.
குறித்த குழந்தைக்கு நேற்று (19.12.2021) மாலை குழந்தைக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில், உடனடியாக புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலயில் குழந்தை சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியாலைக்கு மாற்றப்பட்டது.
இருப்பினும், சிகிச்சை பலனின்றி இரவு (20-12-2021) 9 மணிக்கு குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவ அறிக்கையிடப்பட்டது. குழந்தையின் மாதிரிகள் பெறப்பட்டு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என அறிக்கையிடப்பட்டது.
குழந்தையின் இறப்பு விசாரணையை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னெடுத்துள்ளனர்.