யாழ். தையிட்டி பற்றி பேச காலம் சரியில்லையாம்? நீதி அமைச்சர் தெரிவிப்பு
தையிட்டியில் விகாரைக்கென ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுமக்களது காணிகளை பற்றி தேர்தல் காலத்தில் பேசமுடியாதென இலங்கை நீதி அமைச்சர் யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்.
தையிட்டி விகாரைக்கென ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தனியார் காணிகளை உபதேசங்கள் மூலமும் நல்லிணக்கம் மூலம் பெற திட்டமிட்டு தெற்கிலிருந்து தருவிக்கப்பட்ட பௌத்த துறவிகள் மற்றும் குழுக்கள் மூலம் பெற யாழில் தொடர் கூட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆக்கிரமிக்கப்பட்ட விகாரை தொடர்பில் தீர்வு தர வருகை தந்திருந்த நீதி அமைச்சரே தேர்தல் காலத்தில் பேசமூடியாதென தெரிவித்துள்ளார்.
இதனிடையே இம்மாதம் நடுப்பகுதியில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், கடந்த 34வருடங்களாக மூடப்பட்டுள்ள பலாலி வீதி திறப்பு சாத்தியமாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
அவ்வகையில் யாழ்ப்பாணம் - பலாலி வீதியில் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள 2.5 கிலோ மீற்றர் நீளமான வீதியே மிக விரைவில் திறந்துவிடப்படவுள்ளதாகவும், அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.