யாழில் வாள்வெட்டு; சிகிற்சை பலனின்றி இளைஞன் உயிரிழப்பு!
யாழ் குருநகர் பகுதியில் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் குருநகரிலுள்ள திருச்சிலுவை சுகநல நிலையத்திற்கு அண்மையில் நேற்று அப்பகுதிய சேர்ந்த இளைஞர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
நீண்டகாலமாக குருநகருக்கும் அயலிலுள்ள இன்னொரு கிராம இளைஞர் குழுக்களிற்கிடையிலான மோதலின் தொடர்ச்சியாக இந்த வாள்வெட்டு நடந்ததா என்ற கோணத்திலும் பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.
சம்பவத்தில் 5 பேர் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களில் இருவர் படுகாயமடைந்திருந்தனர்.
இந்நிலையில் உயிராபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் இன்று உயிரிழந்துள்ளார். குருநகரை சேர்ந்த ஜெரன் என அழைக்கப்படும் 24 வயதான இளைஞனே உயிரிழந்த நிலையில் நேற்றையதினம் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வீதியில் பெருமளவு குருதி வெளியேறியிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
https://jvpnews.com/article/in-jaffna-during-the-curfew-1629637831