வரலாற்றில் முதன் முறையாக சிலம்பம் போட்டியில் யாழ். மாணவர்கள் சர்வதேச ரீதியில் சாதனை
யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று தெற்கில் அமைந்துள்ள வேலுப்பிள்ளை செல்லம்மா இலவசக் கல்வி நிலையத்தின் மாணவர்கள், இந்திய அணியுடன் சேர்ந்து ஓபின் சர்வதேச ரீதியில் சிலம்பம் போட்டியில் பங்குபெற்று முக்கிய வெற்றியைப் பெற்றுள்ளனர்.
குறித்த சாதனையை இவர்கள் நிகழ்த்தியதற்காக இலவசக் கல்வி நிலையத்தின் நிர்வாக இயக்குனர் வேலுப்பிள்ளை தெய்வேந்திரா அவர்களால் கௌரவிக்கப்படவுள்ளனர்.
அவர் தற்போது நோர்வேயில் வசிக்கின்றார். கடந்த 7ம் மற்றும் 8ம் திகதிகளில் நுவரெலியாவில் அமைந்துள்ள municipal council indoor stadiumஇல் சர்வதேச ரீதியில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் வடமராட்சி கிழக்கின் மாணவர்கள் பெரும் சாதனை படைத்துள்ளனர்.
இந்த வெற்றிக்காக பங்குபற்றிய மாணவர்களையும், அவர்களுக்கு பயிற்சியளித்த யாழ் மாவட்ட கராத்தே சங்கத்தின் தலைவரும், கல்வி நிலையத்தின் கராத்தே மற்றும் சிலம்ப பயிற்றுவிப்பாளருமான க.கமலேந்திரன் அவர்களையும் கௌரவிக்கப்படவுள்ளனர்.
இந்த கௌரவிப்பு நிகழ்வு எதிர்வரும் 15.02.2025 ஞாயிற்றுக்கிழமை கல்வி வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த சாதனையை பெற்று, வடமராட்சி கிழக்கு பள்ளிகளில் முதன்முறையாக சர்வதேச சிலம்ப போட்டியில் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.