ஜோர்ஜியாவில் UCMAS சர்வதேச போட்டியில் யாழ் மாணவர்கள் சாதனை!
ஐரோப்பிய நாடான ஜோர்ஜியாவில் நடைபெற்ற UCMAS சர்வதேச மட்டப் போட்டியில் இலங்கையிலிருந்து பங்கேற்ற 58 மாணவர்கள் ஏராளமான வெற்றிக் கிண்ணங்களை இலங்கைக்கு பெற்றுக் கொடுத்துள்ளார்கள்.
திருநெல்வேலி, நல்லூர், சுண்டிக்குளி UCMAS பயிற்சி நிலைய மாணவர்கள் 8 பேர் பங்கேற்று வெற்றி கிண்ணங்களைப் பெற்று இலங்கைக்கும் யாழ் மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார்கள்.

அவர்களில் விநாயகிருஷ்ணன் கோபிகிருஷ்னா சம்பியன் வெற்றி கிண்ணத்தத்தையும் மற்றும் அஷ்வினி அனோஜன், அபூர்விகா ரகுநாதன் 1 st runner up வெற்றி கிண்ணங்களையும், வினோஷ்கா பிரசன்னா, சுமணன் அப்ஷரன், கிருஷ்ணிகா நிதர்சன், மோகனகுமார் வேணுகானன் 2 nd runner up கிண்ணங்களையும் கேனுஜா மோகனகுமாரன் 3 rd runner up கிண்ணணத்தையும் பெற்றுள்ளார்கள்.
மேலும் அங்கு நடைபெற்ற UCMAS world cup போட்டிக்குரிய அணியில் திருநெல்வேலி ucmas மாணவி அஷ்வினி அனோஜன் பங்கு பற்றி Silver Medal ஐ இலங்கைக்கு பெற்றுக் கொடுத்துள்ளார்.