யாழில் மோட்டார் சைக்கிளை திருடிய திருடன் செய்த செயல்!
யாழில் உள்ள பகுதி ஒன்றில் இயக்க நிலையில் இருந்த மோட்டார் சைக்கிள் இரவு வேளை திருட்டு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று முன் தினம் இரவு (24-04-2022) மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லுண்டாய் வைரவர் கோவில் வீதியில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் வேலை முடிந்து வரும் வழியில் கோவில் உள்ளதால், மோட்டார் சைக்கிளை வீதியில் இயக்க நிலையில் நிறுத்திவிட்டு கோவிலை தரிசித்துக் கொண்டிருந்தார்.
இதன்போது அங்கிருந்த திருடன் மோட்டார் சைக்கிளின் உரிமையாளரது கண் முன்னாலேயே மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றுள்ளான்.
இச் சம்பவத்தை பார்த்தும், தனது மோட்டார் சைக்கிளை காப்பாற்ற முடியாத உரிமையாளர், மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று மாலை வேளையில் அவரது மோட்டார் சைக்கிளானது திருட்டு போன இடத்திற்கு அருகாமையில் உள்ள வீதியில் நிறுத்தப்பட்டிருந்தது.
இதனையடுத்து மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்றார்.