யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை நாடிவந்த சிங்கள குடும்பம் ; வியக்க வைத்த காரணம்!
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவப் பெருவிழா தற்போது நடைபெற்று வரும் நிலையில், தென்னிலங்கையில் இருக்கும் பெரும்பான்மை இனத்தவர்களும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டு வந்துள்ளமை வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் கடந்த 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இதன்படி தொடர்ந்து 25 நாட்கள் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்று சப்பரம், தேர் மற்றும் தீர்த்த திருவிழாக்களுடன் நல்லூர் கந்தனின் உற்சவம் இனிதே நிறைவுறும்.
இந்தநிலையில், நல்லூரானை தரிசிக்க கேகாலையில் இருந்து ஒரு சிங்களக் குடும்பம் யாழ்ப்பாணம் - நல்லூரை நாடிச் சென்றுள்ளது.
முதன் முறையாக தாங்கள் நல்லூர் திருவிழாவில் பங்குபற்றுவதாகவும், இங்கு வந்த பார்த்த பின்னர், தமிழர்களின் உண்மையான பக்தி தமக்கும் ஏற்படுவதாகவும் அவர்கள் மெய்சிலிர்த்து குறிப்பிட்டனர்.