மிக சிறப்பாக இடம்பெற்ற செல்வச்சந்நிதி முருகன் ஆலய சப்பறத்திருவிழா!
யாழ். செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த திருவிழாவில், இன்றைய தினம் சப்பறத்திருவிழா மிக சிறப்பாக இடம் பெற்றது.
ஈழத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான தொண்டைமனாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த திருவிழாவில், இன்றைய தினம் (08-09-2022) சப்பறத்திருவிழா மிக சிறப்பாக இடம் பெற்றது.
செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் ஒகஸ்ட் 27-ம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
நாளை (09-09-2022) காலை 9 மணிக்கு தேர் திருவிழாவும் இடம்பெறவுள்ளதுடன் செப்டம்பர் 10-ம் திகதி காலை தீர்த்தத் திருவிழாவும் அன்று மாலை 6 மணிக்கு மௌனத் திருவிழாவும் செப்டம்பர் 11-ம் திகதி பூக்காரர் பூசையும் நடைபெறவுள்ளது.
இன்றைய நாள் சப்பறத் திருவிழாவிலும் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டதுடன் தேர்த்திருவிழாவிலும் இன்னும் திரளாக மக்கள் கலந்துகொள்வர் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.