யாழில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரின் தந்தையிடம் கைவரிசை காட்டிய திருடர்கள்!
யாழ்ப்பாண பகுதியில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ஒருவரின் தந்தையாரிடம் வழிப்பறி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்றைய தினம் (27-07-2023) காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் சுகிர்தனின் தந்தையான பெரியதம்பி சந்திரலிங்கம், குடத்தனையில் இருந்து பருத்தித்துறை சென்ற போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மந்திகை மக்கள் கடைச் சந்தியில் வைத்து காலை 7 மணியளவில் CID என தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட இருவர் உன்னை சோதிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
இதனையடுத்து கையை உயர்த்தியவாறு நின்றிருந்தவரது சேட் பொக்கட்டில் இருந்த பணத்தை குறித்த நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
மேலும், குறித்த நபர்களினால் 18 ஆயிரம் ரூபா பணம் வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.