யாழில். சட்டவிரோத செயலை கட்டுப்படுத்த வீதி தடைகள்
யாழ்ப்பாணம் வடமராட்சி மற்றும் தென்மராட்சி பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத செயல்களை கட்டுப்பட்டுத்த இராணுவத்தினரது பங்களிப்புடன் வீதித் தடை, காவலரண்கள் அமைத்து தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது
யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகையை பொது பயன்பாட்டிற்கு கையளிக்க ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இணக்கம் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கீரிமலை ஜனாதிபதி மாளிகை தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்ட போதே அவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி மாளிகை அப்பகுதியில் உள்ள தனியார் காணிகளையும் கையகப்படுத்திய நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அந்த காணிகளின் உரிமையாளர்களுக்கு நஷ்ட ஈடுகளை , அல்லது காணிக்கான பெறுமதியை வழங்க முடியும்.
சட்டவிரோத மண் அகழ்வு
தொடர்ந்து சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக , யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கோ , சுற்றுலாத்துறைக்கோ ஜனாதிபதி மாளிகையை கையளிக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
வடமராட்சி மற்றும் தென்மராட்சி பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத மண் அகழ்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் கோரிக்கை முன் வைக்கப்பட்டது அதன் போது , பொலிஸார் அதனை கட்டுப்படுத்துவதற்கு தமக்கு வாகன வசதி இல்லை என குறிப்பிட்டனர்.
அதனை அடுத்து இராணுவத்தினரது பங்களிப்புடன் வீதித் தடை, காவலரண்கள் அமைத்து தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது