யாழை நோக்கி சென்றுகொண்டிருந்த நபரை சுற்றிவளைத்த இராணுவத்தினர்! சிக்கிய மர்மம்
யாழில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டிருந்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரு சந்தேக நபரை மணியந்தோட்டம் மற்றும் பூம்புகார் பகுதியில் வைத்தே கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது தொடர்பில் தெரியவருகையில், மணியந்தோட்டத்தை சேர்ந்த நபர், ஹெரோயின் விற்கும் நோக்குடன் யாழ்.நகர் நோக்கி சென்றுகொண்டிருந்துள்ளார்.
தகவலறிந்த இராணுவ புலனாய்வு பிரிவினர், அந்த நபரை சுற்றிவளைத்து சோதனை செய்து அவரிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை, பூம்புகார் பகுதியில் உள்ள கடை ஒன்றில் ஹெரோயினை மறைத்து வைத்திருத்த நபரும் இராணுவத்தால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சமீப காலமாக இளம் சமூகத்தினரிடையே போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக புத்திஜீவிகள் கவலை வெயிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.