வெளிநாட்டில் தவறி விழுந்த யாழ் நபர் உயிரிழப்பு
அபுதாபியில் கட்டடம் ஒன்றில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவத்தில் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை, புளியடியை சேர்ந்த முருகேசு விஜயரத்தினம் என்ற 55 வயதான நபரே உயிரிழந்துள்ளார்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி
குறித்த நபர் தொழில் நிமித்தம் அபுதாபியில் வசித்து வந்த நிலையில் ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி மூன்று மாடி உயர கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார்.
இதனையடுத்து அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தூதரகத்தின் உதவியுடன் வீட்டார் அவரை கடந்த 17ஆம் திகதி இலங்கைக்கு கொண்டு வந்து, யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.