யாழ். மாநகர சபையின் அடுத்த முதல்வர் யார்?
யாழ். மாநகர சபைக்கு முதல்வர் தேர்வு இனி இடம்பெறாது என வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தெரிவித்தார்.
மணிவண்ணன் இராஜினாமா
இதுவரை யாழ் மாநகர சபை முதல்வராகவிருந்த விஸ்வலிங்கம் மணிவண்ணன் யாழ். மாநகர சபை முதல்வர் பதவியை இன்று (31) இரவு முதல் இராஜினாமா செய்யவுள்ளதாக கடிதம் முலம் யாழ். மாநகர ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் கருத்து தெரிவிக்கையில்,
மாநகர சபை கட்டளைச் சட்டத்தின் படி இனி மேயர் தெரிவை மேற்கொள்ள முடியாது. அதேசமயம் சபையை கலைப்பது தொடர்பாக நான் தீர்மானிக்க முடியாது. அது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்படும்.
கிழக்கு மாகாணத்திலும் இவ்வாறான நிலைமை காணப்படுகின்றது.
கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரப்பட்டுள்ள நிலையில் இன்னமும் அங்கும் பதில் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.