பக்தர்கள் புடைசூழ திருவாதிரை நாளில் தேரில் பவனி வந்த யாழ். நல்லூர் சிவன்;
யாழ். நல்லூர் சிவன் கோயில் தேர்த்திருவிழா இன்று காலை பெரும் திரளான பக்தர்களுடன் வெகு சிறப்பாக நடைபெற்றது. சிதம்பரத்தில் திரும்வெம்பாவை சிறப்பு நாளில் ஆருத்ரா தரிசனம் இன்று இடம்பெற்றது.
அந்தவகையில் யாழ்ப்பாண சிவன் கோவிலில் திருவாதிரை நாளில் ஆலய தேர்த்திருவிழா இடம்பெற்றது.
இந்நிலையில் யாழ்ப்பாணம் நல்லூர் சிவன் ஆலயத்தில் இடம்பெற்ற தேர்த்திருவிழாவில் பகதர்கள் கலந்துகொண்டு சிவபெருமானின் ஆசியை பெற்றனர்.
நல்லூர் கந்தனிலும் திருவாதிரை உற்சவம்
அதேவேளை வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய மார்கழி திருவாதிரை உற்சவம் இன்றையதினம் (புதன்கிழமை) காலை இடம்பெற்றது.
காலை 6.45 வசந்த மண்டபப் பூசை நடைபெற்று முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராக உள்வீதி வலம் வந்ததைத் தொடர்ந்து காலை 7.15 மணிக்கு வெளி வீதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு நல்லூர் கந்தப்பெருமான் காட்சி தந்தார்.