யாழ். நாகபூசணி அம்மன் சிலை காவலரணுக்கு மர்ம நபர்களால் நேர்ந்த நிலை!
யாழ்ப்பாணம் - பண்ணை நாகபூசணி அம்மன் சிலைக்கு அருகில் அமைக்கப்பட்ட தற்காலிக பொலிஸ் காவலரண் இனம் தெரியாத நபர்களால் இரவு உடைக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் நேற்றையதினம் சனிக்கிழமை இரவு (27-05-2023) இடம்பெற்றுள்ளது.
யாழ் பண்ணை நாகபூசணி அம்மன் குறித்த இடத்தில் வைக்கப்பட்டமை தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில் குறித்த சிலையின் பாதுகாப்புக்காக தற்காலிக கூடாரம் அமைத்து பொலிஸார் தங்கியிருந்தனர்.
வழக்கு விசாரணைகள் நிறைவுற்ற நிலையில் பொலிஸார் குறித்த இடத்திலிருந்து அகன்ற நிலையில் கூடாரம் அகற்றப்படாமல் இருந்த நிலையில் இனம் தெரியாத நபர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

