யாழில் வாளுடன் வந்த மூவர்... இளைஞர்கள் மேற்கொண்ட துணிச்சலான செயல்!
யாழில் வாளுடன் வந்த மூவரில் ஒருவர் இளைஞர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட பின்னர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
மூளாய் – வேரம் பகுதியைச் சேர்ந்த மூவர் வாள்களுடன் தாக்குதலுக்கு வந்தவேளை இரண்டு வாள்களுடன் சந்தேகநபர் ஒருவர் மடக்கி பிடிக்கப்பட்டு வட்டுக்கோட்டை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மற்றையவர்கள் இருவரும் தப்பித்துச் சென்றுள்ளனர்.
பொலிஸில் ஒப்படைக்கப்பட்ட நபர் தாக்குதலுக்கு இலக்காகி காயங்களுக்கு உள்ளாகியிருப்பதால் அவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
சிகிச்சையின் பின்னர் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்.