யாழ் மருத்துவ பீடத்தில் பரீட்சை மோசடி ; மாணவிக்கு ஒரு வருட தடை
யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மருத்துவ பீட பரீட்சையில் மோசடி செய்த மாணவி ஒருவருக்கு ஒரு வருட தடை விதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதள பதிவொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீட இறுதியாண்டு பரீட்சையில் தோற்றிய மாணவி தான் அணிந்திருந்த பரிதா ஆடையின் உள்ளே மறைத்து வைத்திருந்த கைத் தொலைபேசியின் ஊடாக பரீட்சை மோசடி செய்த குற்றத்திற்காகவே மாணவிக்கு ஒரு வருட தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடை விதிக்கப்பட்ட ஒரு வருட காலத்தினுள் மாணவி பல்கலைக் கழக பரீட்சைகள் எவற்றிலும் தோற்ற முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
முஸ்லீம் மாணவி தனது காலாசார உடையாக பரிதா அணிந்திருந்தபோது அதனை சாதகமாக பயன்படுத்தியே இந்த மோசடியில் ஈடுபட்டமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது என பல்கலைக் கழக வட்டாரங்களிலிருந்து பெறப்பட்ட விபரங்களின் அடிப்படையில் இந்த செய்தி உறுதி செய்யப்பெறுகின்றது என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.