யாழ் - மன்னார் தடவழி; போட்டி போட்டு ஓடும் அரச தனியார் பேருந்துகள்; அச்சத்தில் பயணிகள்!(Video)
யாழ் - மன்னார் போக்குவரத்து சேவையில் போட்டி போட்டு ஓடும் அரச தனியார் பேருந்துகள் தொடர்பில் காணொளி வெளியாகியுள்ள நிலையில் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
பேருந்துகளின் அதிவேகத்தால் அந்த பேருந்துகளில் பயணித்த பயணிகள் உயிரை கையில் பிடித்துகொண்டு அச்சத்தின் மத்தியில் பயணித்ததாக கூறப்படுகின்றது.
அதேவேளை நாட்டில் விபத்துக்களில் தினமும் பலர் உயிரிழக்கின்ற நிலையில், பேருந்துகளின் போட்டாபோட்டியால் விபத்துக்கள் அதிக ஏற்படக்கூடிய வாய்ப்புண்டு.
தள்ளாடி வரை வேகமும் போட்டியும்
எனவே பேருந்து சாரதிகள் பயணிகளை கருத்தில் கொண்டு அவதானமாக வாகங்களை செலுத்த வேண்டும் என்பதுடன் ,இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
குறித்த பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் தனது ஆதங்கத்தை முகநூலில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில் ,
யாழில் இருந்து மாலை 04.45 க்கு தனியார் பேருந்து பயணத்தை ஆரம்பித்த நேரம், அரச பேருந்து 05:30க்கு பயணத்தை ஆரம்பித்திருந்தது.
பூநகரி தாண்டியதும் முற்கொம்பன் என்ற இடத்தில் வைத்து தனியார் அரச பேருந்து தனியார் பேருந்தை முந்திய கணத்தில் இருந்து இரண்டு பேருந்துகளுக்குமான போட்டி ஆரம்பம் ஆனது.
நீங்கள் காணொளியில் காணக்கூடிய இந்த வேகமும் போட்டியும் சிறிய தூரத்துக்கானது அல்ல நான் பல்லவராயன்கட்டு சந்தியில் இறங்கினேன். என் கணிப்பு சரியெனில் தள்ளாடி வரை இதே வேகமும் போட்டியும் தொடரும்.
நான் சொல்ல வந்த விடயம், முற்கொம்பன் – பல்லவராயன் கட்டு சந்திக்கு இடைப்பட்ட தூரத்திற்கான இவர்களது போட்டியில் ஏற்றாமல் விடப்பட்ட பயணிகளின் எண்ணிக்கை 15 க்கு குறையாமல் இருக்கும்.
இந்த இரண்டு பேருந்துகளால் பயணிகள் ஏற்றப்படாமல் தவிர்க்கபடும் போது நேரம் மாலை 06:00 மணி தாண்டிவிட்டது. A32 பாதையூடாக நீங்கள் பயணித்திருப்பின் அவதானித்திருப்பீரகள்.
முற்கொம்பனில் இருந்து முழங்காவில் வரை இரண்டு பக்கமும் காடு சூழ்ந்த பகுதி. பேருந்து ஓட்டினர்கள் மற்றும் நடத்துனர்களின் பணிப்பிழையின் காரணமாக ஏற்றாமல் விடப்பட்ட பயணிகளின் அசளகரியங்களுக்கும் அவர்களது பாதுகாப்புக்கும் யார் பொறுப்பு?
இந்த பேருந்துகளின் சாரதிகளும் நடத்துனரகளும் தண்டிக்கப்பட வேண்டும் என அவர் பதிவிட்டுள்ளார்.