யாழ்ப்பாணம் மண்டைதீவு புதைகுழி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு
1990களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யாழ்ப்பாணம் மண்டைதீவு படுகொலை மற்றும் அதனுடன் தொடர்புடைய புதைகுழி விவகாரம் தொடர்பான வழக்கு, மேலதிக சாட்சியங்கள் மற்றும் தடயங்களைத் திரட்டுவதற்காக எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (22) ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நவம்பர் 10ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
இதன்போது யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தங்களிடம் உள்ள சான்றுகளை சமர்ப்பித்ததுடன், மேலதிக சாட்சியங்கள் மற்றும் தடயங்களைத் திரட்டுவதற்கு மேலும் கால அவகாசம் கோரினர்.
கடந்த ஜூலை 28ஆம் திகதி நடைபெற்ற விசாரணையின்போதும், சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படும் இடம் தொடர்பான ஆவணங்கள், சாட்சியங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து திரட்டி சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் பொலிஸாருக்கு அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில், மேலதிக விசாரணைகளுக்காக வழக்கு எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, குறித்த வழக்கு 2025 செப்டெம்பர் 17ஆம் திகதி ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் முதன்முறையாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேலதிக சாட்சியங்கள் மற்றும் தடயங்களைத் திரட்டுவதற்காக பொலிஸார் தொடர்ச்சியாக கால அவகாசம் கோரி வருவதால், நீண்டகாலமாகத் தீர்வு காணப்படாமல் உள்ள மண்டைதீவு புதைகுழி விவகாரத்தின் விசாரணைகள் மேலும் தாமதமடைவது குறித்து பாதிக்கப்பட்ட தரப்பினர் கவலை வெளியிட்டுள்ளனர்