யாழில் இடம்பெற்ற பாரிய விபத்து: இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்
யாழ்.கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்றில் முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து இன்று செவ்வாய்கிழமை (22-03-2022) நண்பகல் யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில், கொடிகாமம், இராமாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த விபத்து சம்பவம் முச்சக்கர வண்டியும், குளிரூட்டி வாகனமும் மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டியை சேர்ந்த எஸ்.யுகிந்தன் என்ற இளைஞனே இவ்வாறு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி பகுதியில் இருந்து கொடிகாமம் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி இராமாவில் பகுதியில் வலது பக்கமாக அல்லாரை வீதிக்கு திரும்ப முற்பட்ட வேளை பின்னே பயணித்த குளிரூட்டி வாகனம் மோதியுள்ளது. என ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கொடிகாம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.