Jaffna Kings உரிமையாளர் கைது ; ஸ்ரீலங்கா கிரிக்கெட் விளக்கம்

Sri Lanka Cricket Crime Jaffna Kings
By Sulokshi Jul 17, 2026 02:30 PM GMT
Report

லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் 'Jaffna Kings அணியின் உரிமையாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு விசாரணைக்கும், விளையாட்டுகளுடன் தொடர்புடைய தவறுகளைத் தடுப்பதற்கான விசேட விசாரணைப் பிரிவுக்கு அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த கைது நடவடிக்கை தொடர்பில் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் இன்று (17) பிற்பகல் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jaffna Kings உரிமையாளர் கைது ; ஸ்ரீலங்கா கிரிக்கெட் விளக்கம் | Jaffna Kings Owner Arrest Sl Cricket Clarification

 ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம்  அறிக்கை

இந்தக் கைது சம்பவம் குறித்து வெளியாகும் செய்திகள் தொடர்பில் தங்களது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இதற்காகத் தமது நிறுவனம் மற்றும் எல்.பி.எல் ஒழுங்கமைப்புக் குழு ஆகியன அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்கும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்போட்டித் தொடரின் நேர்மைத்தன்மையையும் கௌரவத்தையும் பாதுகாப்பதற்குத் தாம் கடமைப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. இதன் காரணமாக, இப்போட்டித் தொடருடன் தொடர்புடைய எந்தவொரு தரப்பினராலும் முன்னெடுக்கப்படும் ஊழல்கள், ஒழுக்கக்கேடான நடத்தைகள் அல்லது முறையற்ற செயல்களை எவ்வகையிலும் அங்கீகரிக்கப் போவதில்லை என்றும் அது கூறியுள்ளது.

யாழில் அதிரடியாக கைதான முக்கிய நபர்!

யாழில் அதிரடியாக கைதான முக்கிய நபர்!

எவ்வாறாயினும், இந்தச் சம்பவத்தினால் போட்டித் தொடருக்கு எந்தவித தடங்கலும் ஏற்படாது என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று (17) இரவு கொழும்பு எஸ்.எஸ்.சி (SSC) மைதானத்தில் நடைபெறவுள்ள 'காலி கேலன்ட்ஸ் - ஜப்னா கிங்ஸ்' (Galle Gallants - Jaffna Kings) அணிகளுக்கு இடையிலான போட்டி திட்டமிட்டபடி இடம்பெறும் என கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இப்போட்டித் தொடரை மிக உயர்ந்த ஒழுக்க விழுமியங்கள் மற்றும் நேர்மைத்தன்மையின் தரநிலைகளுக்கு இணங்க நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் ஊழல் ஒழிப்புப் பிரிவு, விளையாட்டுகளுடன் தொடர்புடைய தவறுகளைத் தடுப்பதற்கான விசேட விசாரணைப் பிரிவுடன் இணைந்து நெருக்கமாகச் செயற்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடமையில் ஈடுபட்டிருந்த பெண் பொலிசிடம் சில்மிசம்; கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம்!

கடமையில் ஈடுபட்டிருந்த பெண் பொலிசிடம் சில்மிசம்; கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம்!

மேலும், அதிக வெளிப்படைத்தன்மையுடன் கூடிய, ஊழலற்ற சூழலை உறுதி செய்வதற்காக, இம்முறை போட்டித் தொடர் முழுவதும் சுயாதீன அமைப்பொன்றின் நிபுணர் உதவியைப் பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US